பீகாரில் வங்கி கணக்கு இல்லாத கிராமத்தினருக்கு ஏ.டி.எம். கார்டுகள்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

பீகாரில் வங்கி கணக்கு இல்லாத கிராமத்தினருக்கு ஏ.டி.எம். கார்டுகள்:  சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
x
தினத்தந்தி 27 Dec 2016 2:00 PM GMT (Updated: 27 Dec 2016 2:00 PM GMT)

பீகாரில் நக்சலைட்டுகள் அதிகமுள்ள ஜமுய் மாவட்டத்தில் வங்கி கணக்குகள் இல்லாத கிராமத்தினர் சிலருக்கு ஏ.டி.எம். கார்டுகள் கிடைத்தது பற்றி விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை போலீசார் அமைத்துள்ளனர்.

ஜமுய்,

பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் சிகண்ட்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட அச்சம்பாவ் என்ற கிராமத்தில் வசித்து வரும் நூற்றுக்கணக்கானோருக்கு அஞ்சல் வழியே ஏ.டி.எம். கார்டுகள் வந்து சேர்ந்தன.  இது சிஜவுரியில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

தங்களுக்கு வங்கி கணக்குகள் இல்லாத நிலையில் ஏ.டி.எம். கார்டுகள் அனுப்பப்பட்டுள்ள விசயத்தினை அறிந்து அவர்கள் ஆச்சரியமடைந்து உள்ளனர்.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில் பண பற்றாக்குறையில் சிக்கியுள்ள மாவோயிஸ்டுகளுக்கு இதில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி ஜமுய் மாவட்ட எஸ்.பி. ஜெயந்த் காந்த் கூறும்பொழுது, இந்த விவகாரத்தினை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.  அது கண்டறியும் விவரங்களின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்திடுவார்கள் என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் மாவோயிஸ்டுகள் மீது சந்தேகப்படுகிறீர்களா? என கேட்டதற்கு, அனைத்து நோக்கங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறினார்.  இந்த விவகாரத்தினை பஞ்சாப் தேசிய வங்கியும் கருத்தில் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story