தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் பேச்சுக்கே இடமில்லை-கர்நாடக மந்திரி


தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் பேச்சுக்கே இடமில்லை-கர்நாடக மந்திரி
x
தினத்தந்தி 5 Jan 2017 8:24 AM GMT (Updated: 2017-01-05T13:54:55+05:30)

காவிரி படுகையில் உள்ள அனைத்து நான்கு நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இல்லை,தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக மந்திரி கூறி உள்ளார்.

சென்னை

காவிரியில் இருந்து, தமிழகத்துக்கு 2,000 கன அடி நீர் தண்ணீர் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடகா மீண்டும் மறுத்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் பாட்டில் கூறுகையில்:-

காவிரி படுகையில் உள்ள அனைத்து நான்கு நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இல்லை, பிறகு நாங்கள் எப்படி தண்ணீர் திறந்து விட முடியும்? " தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் பேச்சுக்கே இடமில்லை. மேலும், இந்த தீர்ப்பில் மாற்றம் செய்யக்கோரி, கர்நாடகா அரசு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது’
இரண்டாவது ஆண்டாக காவிரி பாசன பகுதிகள் கடுமையான வறட்சியை  சந்தித்து வருகிறது. கேஆர்எஸ்  அணை தண்ணீர் இல்லாததால் மூடபட்டு உள்ளது. எனக்கூறியுள்ளார்.

இந்நிலையில் தண்ணீர் திறக்க கர்நாடக மறுப்பு தெரிவித்தால், ராணுவப் பாதுகாப்புடன் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story