நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் தகவல்

நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2017 12:16 PM GMT (Updated: 2017-01-05T17:46:55+05:30)

நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.

சண்டிகார்,

நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார். 

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அமரீந்தர் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நவ்ஜோத் சிங் சித்து அவரது மனைவி நவ்ஜோத் கவுர் தொகுதியான அமிர்தசரச் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். சித்து அமிர்தசரஸ் (கிழக்கு) காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அவர் கூறினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து செப்டம்பர் 14, 2016 அன்று பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.  அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் கடந்த தேர்தலில் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது நினைவுகூறத்தக்கது.

Next Story