ஆந்திராவை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வென்றால் ரூ.100 கோடி பரிசு:சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திராவை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வென்றால் ரூ.100 கோடி பரிசு:சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Jan 2017 12:34 PM GMT (Updated: 5 Jan 2017 12:34 PM GMT)

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வென்றால் அவர்களுக்கு தலா ரூ.100 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வென்றால் அவர்களுக்கு தலா ரூ.100 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

பல திறமைசாலிகள் இருந்தும் நோபல் பரிசு வாங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. எனவே ஆந்திராவில் இருந்து நோபல் பரிசு வாங்கும் விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும்.  இளைஞர்கள்  இதனை சவாலாக எடுத்துக்கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பின் மூலம் நோபல் பரிசு பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story