காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ராணுவ தளபதி ஆய்வு


காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ராணுவ தளபதி ஆய்வு
x
தினத்தந்தி 5 Jan 2017 1:03 PM GMT (Updated: 2017-01-05T18:33:36+05:30)

புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள பிபின் ராவத் இன்று ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

ஜம்மு, 

இந்திய ராணுவ தளபதியாக இருந்த தல்பீர் சிங் சுஹாக் ஓய்வுபெற்றதையடுத்து, புதிய ராணுவ தளபதியாக பிபின் ரவாத் கடந்த டிசம்பர் 31ந்தேதி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.தளபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக காஷ்மீருக்கு  இன்று பிபின் ரவாத் வந்தார். அவரை, மூத்த ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர். 

காஷ்மீரின் நக்ரடாவில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்திற்கு வந்த தளபதி, ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு குறித்தும், எல்லை பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் நடந்த ராணுவ அதிகாரிகள் கூட்டத்திலும் பிபின் ரவாத் கலந்து கொண்டார்.
மேலும், உதம்பூர் பகுதியையும் ராணுவ தளபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story