பெங்களூர் சம்பவத்தைப்போன்று டெல்லியிலும் புத்தாண்டின் போது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்


பெங்களூர் சம்பவத்தைப்போன்று டெல்லியிலும் புத்தாண்டின் போது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்
x
தினத்தந்தி 5 Jan 2017 1:30 PM GMT (Updated: 2017-01-05T19:00:46+05:30)

பெங்களூருவை தொடர்ந்து, புத்தாண்டு தினத்தில் டெல்லியிலும் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள் சிலர், போலீசார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

பெங்களூருவை தொடர்ந்து, புத்தாண்டு தினத்தில் டெல்லியிலும் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள் சிலர், போலீசார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று கற்பழிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முக்கிய குற்றவாளி அடையாளம் காணப்பட்டு உள்ளான். 

இந்நிலையில் பெங்களூரை போன்று தலைநகர் புதுடெல்லியிலும் புத்தாண்டு தினத்தில் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள் சிலர் போலீசாரையும் தாக்கி உள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டெல்லியில் உள்ள முகர்ஜி நகர் பகுதியில் புத்தாண்டு அன்று மோட்டார் சைக்கிளில் வந்த இளம்பெண் ஒருவரை அங்கு இருந்த கும்பல் சிலர் தடுத்து நிறுத்து பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த கும்பலிடம் இருந்து பெண்ணை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் அந்த் பெண் உட்பட பலர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலீசார் வாகனங்களையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் போதையில் இருந்தாக கூறப்படுகிறது.

தப்பி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Next Story