தேர்தல் ஆணையரை சந்திக்காமல் லக்னோ திரும்பினார் முலாயம் சிங் யாதவ்


தேர்தல் ஆணையரை சந்திக்காமல் லக்னோ திரும்பினார் முலாயம் சிங் யாதவ்
x
தினத்தந்தி 5 Jan 2017 3:58 PM GMT (Updated: 2017-01-05T21:27:57+05:30)

சமாஜ்வாடி கட்சியை கைப்பற்றுவதில் நடக்கும் போராட்டம் முடிவுக்குவராத நிலையில், முலாயம் சிங் யாதவ் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை இன்று நடத்தினர்

புதுடெல்லி,

சமாஜ்வாடி கட்சியை கைப்பற்றுவதில் நடக்கும் போராட்டம் முடிவுக்குவராத நிலையில், முலாயம் சிங் யாதவ் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை இன்று நடத்தினர். அப்போது,  கட்சியில் தனக்கு 50 சதவீத ஆதரவு இருப்பதாக கூறி தேர்தல் ஆணையரை சந்திக்கவும் திட்டமிட்டு இருந்தாதகவும் தகவல் வெளியாகியது. 

 தங்கள் நிலைப்பாட்டை முன்வைக்க தேர்தல் ஆணையரிடம் நேரம் கேட்டதாக முலாயம் சிங் யாதவின் நெருங்கிய ஆதரவாளர்கள் கூறினர். ஆனால், இது போன்று எந்த கோரிக்கையும் வரவில்லை என்று தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. பின்னர் பிற்பகலில் முலாயம் சிங் யாதவ் டெல்லியில் இருந்து  கிளம்பி லக்னோ சென்றடைந்தார். தேர்தல் ஆணையரை சந்திக்காமலே முலாயம் சிங் யாதவும் அவரது சகோதரர் ஷிவ்பால் யாதவும்  திரும்பினர். 

உத்தர பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங் யாதவ்- அகிலேஷ் யாதவ் மோதல் முற்றியுள்ளது. கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதையடுத்து இருவரும் சின்னத்தை கைப்பற்றுவதில் இரு தரப்புக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

இதனால், இன்று காலை தங்களுக்கே பெரும்பான்மை ஆதரவு உள்ளதாக கூறி கட்சியின் சின்னத்தை வழங்க கோரி முலாயம் சிங் யாதவ் மற்றும் ஷிவ்பால் யாதவ் டெல்லி விரைந்தனர். அதேவேளையில், அகிலேஷ் யாதவ் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டு தனக்கு ஆதரவாக உள்ள கட்சி பிரநிதிகளிடம் பிரமாணப்பத்திரத்தில் கையெழுத்தி வாங்கி ஆதரவு  பெரும்பான்மை கோரும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். 

Next Story