விவசாயிகள் தற்கொலைகள் 2014 - 2015 இடையே 42 சதவீதம் அதிகரித்துள்ளது


விவசாயிகள் தற்கொலைகள் 2014 - 2015 இடையே 42 சதவீதம் அதிகரித்துள்ளது
x
தினத்தந்தி 6 Jan 2017 7:09 AM GMT (Updated: 2017-01-06T12:38:56+05:30)

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலைகள் 2014 - 2015 இடையே 42 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதுடெல்லி

இந்தியாவில் கடந்த 2014 - 2015ம் ஆண்டுகளில் விவசாயிகளின் தற்கொலை 42 சதவீதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றப்பதிவு கழகம் வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த ஆண்டும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மிகக் குறைந்த அளவு மழையே பதிவாகியுள்ளது.

இதனால், மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, 2014ம் ஆண்டில் 5650 விவசாயிகள், தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை 2015ல் 8007 ஆக உயர்ந்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் 1261 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 709 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த மாநிலங்களுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் 604 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், வாடியப் பயிரைக் கண்டு மனமுடைந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கையும், கடன் வாங்கி விதைத்த நெல்லும் முளைக்காமல், வட்டி மட்டும் வளர்ந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், தேசியக் குற்றப்பதிவு கழகத்தின் இந்த புள்ளி விவரம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story