ரூ.13.60 கோடி பறிமுதல் விவகாரம்: வக்கீல் ரோகித் தாண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி


ரூ.13.60 கோடி பறிமுதல் விவகாரம்: வக்கீல் ரோகித் தாண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 7 Jan 2017 10:24 PM GMT (Updated: 2017-01-08T03:54:28+05:30)

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்ட நிலையில், டெல்லியை சேர்ந்த ரோகித் தாண்டன் என்ற வக்கீலின்

புதுடெல்லி,

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்ட நிலையில், டெல்லியை சேர்ந்த ரோகித் தாண்டன் என்ற வக்கீலின் சட்ட நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.13.60 கோடி பணம் சிக்கியது.

இதைத்தொடர்ந்து ரோகித் தாண்டன் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறையினர், கடந்த 29–ந் தேதி அவரை கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் தாண்டனுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என வாதிட்ட மூத்த வக்கீல் விகாஸ் பக்வா, அவரை ஜாமீனில் விட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  ஆனால் இந்த வழக்கின் விசாரணை முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதால் அவரை ஜாமீனில் விடக்கூடாது எனக்கூறி அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.கே.திரிபாதி, தாண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

Next Story