உ.பி.சட்டசபை தேர்தல்:ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவில்லை ஆனால் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யும்-வைபவ் மகேஸ்வரி

உ.பி.சட்டசபை தேர்தல்:ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவில்லை ஆனால் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யும்-வைபவ் மகேஸ்வரி
x
தினத்தந்தி 8 Jan 2017 10:52 AM GMT (Updated: 2017-01-08T16:22:19+05:30)

உத்தரபிரதேச சட்டபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்படமாட்டார்கள் ஆனால் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் பேச்சாளர் வைபவ் மகேஷ்வரி கூறியுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச சட்டபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்படமாட்டார்கள் ஆனால் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் பேச்சாளர் வைபவ் மகேஷ்வரி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உத்தர பிரேதச சட்டபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தபட மாட்டார்கள்.பஞ்சாப் மற்றும் கோவாவில் ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. உத்தர பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள்.அவர்கள் பிரசாரத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

பணத்தட்டுப்பாடால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கபட்டுள்ள்ளனர். இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் மட்டும் பாரதீய ஜனதா நன்மைகளை செய்ய முடியுமா? அதனால் மக்களுக்கு நாம் எச்சரிக்கை செய்ய வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story