பிப்ரவரி 28–ந் தேதிக்குள் வங்கி கணக்குடன் ‘பான் கார்டு’ எண்ணை இணைக்க வேண்டும் வருமானவரித்துறை அறிவுறுத்தல்


பிப்ரவரி 28–ந் தேதிக்குள் வங்கி கணக்குடன் ‘பான் கார்டு’ எண்ணை இணைக்க வேண்டும் வருமானவரித்துறை அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 8 Jan 2017 10:02 PM GMT (Updated: 2017-01-09T03:32:24+05:30)

வங்கிகளில் கணக்கு வைத்து இருப்பவர்கள் வருகிற பிப்ரவரி 28–ந் தேதிக்குள், ‘பான்’ என்னும் வருமானவரி நிரந்தர கணக்கு எண்ணை தங்கள் வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்றும் வருமானவரி நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்கள் படிவம் எண் 60–ஐ நிரப்பி வங்கியில் வழங்க வேண்டும்

புதுடெல்லி,

வங்கிகளில் கணக்கு வைத்து இருப்பவர்கள் வருகிற பிப்ரவரி 28–ந் தேதிக்குள், ‘பான்’ என்னும் வருமானவரி நிரந்தர கணக்கு எண்ணை தங்கள் வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்றும் வருமானவரி நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்கள் படிவம் எண் 60–ஐ நிரப்பி வங்கியில் வழங்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை கேட்டுக் கொண்டு உள்ளது.

அதேசமயம், ஜன்தன் வங்கி கணக்குகள் மற்றும் பூஜ்யம் இருப்பு தொகை கொண்ட வங்கி கணக்குகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வருமான வரிச்சட்டம் விதி எண். 114–பியின் படி கணக்குதாரர்களின் பான் எண்களை அல்லது படிவம் 60–களை வங்கிகள் ஒழுங்காக ஆவணப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் பண பரிமாற்றங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பான் எண்களுடன் வங்கிகள் பராமரித்து வர வேண்டியது கட்டாயம் என்றும் வருமான வரித்துறை கூறி இருக்கிறது.


Next Story