எல்லையில் பயங்கரவாத தாக்குதல்: 3 தொழிலாளர்கள் பலி


எல்லையில் பயங்கரவாத தாக்குதல்: 3  தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 9 Jan 2017 3:31 AM GMT (Updated: 2017-01-09T09:01:13+05:30)

எல்லையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொழிலாளர்கள் 3 பேர் பலியாகினர்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் மாநிலம்  அக்னூர் செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே,  ஜிஆர்இஎப் (General Reserve Engineer Force) ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமில் தொழிலாளர்களாக பொதுமக்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த முகாமில் இன்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தொழிலாளர்கள் 3 பேர் பலியாகினர்.

பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Next Story