கே.ஜி.ஹள்ளி பாலியல் வன்முறையில் அதிரடி திருப்பம்: திருமணத்தை நிறுத்த நாடகமாடிய கள்ளக்காதல் ஜோடி


கே.ஜி.ஹள்ளி பாலியல் வன்முறையில் அதிரடி திருப்பம்: திருமணத்தை நிறுத்த நாடகமாடிய கள்ளக்காதல் ஜோடி
x
தினத்தந்தி 9 Jan 2017 6:39 AM GMT (Updated: 2017-01-09T12:09:03+05:30)

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பாலியல் வன்முறை வழ்க்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது. திருமணத்தை நிறுத்த கள்ளாக்காதல் ஜோடியே இந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளது

பெங்களூர்

பெங்களூருவில் கடந்த மாதம் (டிசம்பர்) 31–ந் தேதி எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மர்மநபர்கள் சிலர், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுமைகள் அரங்கேறின. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து 4 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும் கடந்த 1–ந் தேதி அதிகாலையில் கம்மனஹள்ளி 5–வது மெயின் ரோட்டில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தார்கள். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெங்களூரு மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது.

இந்த நிலையில், பெங்களூருவில் தொடரும் கொடுமையாக மேலும் ஒரு பெண்ணுக்கு நடுரோட்டில் வைத்து ஒரு மர்மநபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:–

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி அருகே வசித்து வரும் 24 வயது பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.  அதிகாலையில் அவர் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டு சென்றார். கே.ஜி.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எஸ்.பி.ஆர். லே–அவுட் பகுதியில் வைத்து, மீனாவை பின்தொடர்ந்து வந்த ஒரு மர்மநபர், திடீரென்று அருகில் வந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா, காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வசிப்பவர்கள் ஓடிவந்தார்கள். இதனால் அந்த மர்மநபர், அந்த பெண்ணை  தாக்கியதுடன், அவரை கடித்து வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மர்மநபர் தாக்கியதிலும், கடித்ததிலும் பெண்ணின்  முகம், கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.

இதுபற்றி அவர் உடனடியாக தன்னுடைய குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். பின்னர் அந்த் பெண்ணின்  குடும்பத்தினர் சம்பவம் நடந்த இடத்தில் ஏதேனும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளதா? என்று பார்த்தார்கள். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே அந்த வீட்டின் உரிமையாளரிடம் நடந்த சம்பவங்களை கூறி, அங்கிருந்த கேமராவில் ஏதேனும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது அந்த கண்காணிப்பு கேமராவில் அந்த பெண்ணை மர்மநபர் ஒருவர் பின்தொடர்ந்து வரும் காட்சிகள் மட்டும் பதிவாகி இருந்தது. ஆனால் பெண்ணுக்கு மர்மநபர் பாலியல் தொல்லை கொடுத்து, அவரை தாக்கிய சம்பவம் சிறிது தூரம் தள்ளி நடந்திருந்ததால், அதுதொடர்பாக எந்த காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகவில்லை.

அதைத்தொடர்ந்து, நடந்த சம்பவங்கள் பற்றி கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் போலீசாரிடம் வழங்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் மர்மநபரின் உருவம் பதிவாகி உள்ளதால், அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த் சம்பவத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த வழக்கில் போலீசார் இர்ஷத் கான்( வயது 34)  என்பவரை கைது செய்து உள்ளனர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்து உள்ளது.

புகார் கூறிய பெண் மற்றும் குற்றவாளியும் சேர்ந்தே இந்த சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர். புகார் கூறிய பெண்ணின் சகோதரிக்கும் இர்ஷத்கானுக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது.இந்த நிலையில் கானுக்கு பபுகார் கொடுதத் பெண்ணுக்கும் இடையில் கள்ளக்காதல் இருந்து வந்து உள்ளது.

இந்த நிலையில் பொய்புகார் கூறிய பெண்ணுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து உள்ளனர். இந்த் திருமண்த்தை தடுத்து நிறுத்த சகோதரி கணவருடன் சேர்ந்து இவ்வாறு திட்டமிட்டு உள்ளார்.

புகார் கூறியவருக்கும், குற்றவாளியும் செல்போனில் பேசியதற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன.இருவரும் நீண்ட நேரம் பேசி உள்ளனர். ஆனால் இருவரும் ஒரே வீட்டில் தான் வசிக்கின்றனர்.கடந்த 3 வருடங்களாக 2 பேரும் காதலித்து வருகிறார்கள். சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தை பார்த்து திருமணத்தை நிறுத்த இருவரும் இவ்வாறு திட்டமிட்டு உள்ளனர்.


Next Story