டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு


டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
x
தினத்தந்தி 9 Jan 2017 7:06 AM GMT (Updated: 2017-01-09T12:36:30+05:30)

டிஎன்பிஎஸ்சியின் 11 உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுத்துவிட்டது.

புதுடெல்லி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான  டிஎன்பிஎஸ்சியில் தலைவர் உள்பட 14 பேர் உறுப்பினர்கள். உள்ளனர். காலி இடங்களை நிரப்பும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 11 பேர் புதிய உறுப்பினர்களாக்கப்பட்டனர்.

 ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வி.ராமமூர்த்தி, வழக்கறிஞர்கள் ஆர்.பிரதாப்குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன். ஏ.வி.பாலுச்சாமி, எம்.மாடசாமி, பொறியாளர்கள் பி.கிருஷ்ண குமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி. புண்ணியமூர்த்தி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம் ஆகியோர் புதியதாக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்த நியமனத்துக்கு எதிராக திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், சமூகநீதிக்கான வழக்கறிஞர் பேரவை தலைவர் கே.பாலு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கடந்த மாதம் 11 டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களையும் நியமனம் செய்த உத்தரவை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.

ஐகோர்ட் உத்தரவுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான பெஞ்ச், சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது.

சுப்ரீம் கோர்ட் கேள்வி அத்துடன் தகுதியே இல்லாத 11 பேரை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக ஒரே நாளில் நியமனம் செய்தது எப்படி? எனவும் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

Next Story