டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு


டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 9 Jan 2017 9:09 AM GMT (Updated: 2017-01-09T14:39:47+05:30)

டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


புதுடெல்லி:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) புதிய உறுப்பினர்களாக வக்கீல்கள் பிரதாப்குமார், சுப்பையா, முத்துராஜ், சேதுராமன், பாலுச்சாமி, மாடசாமி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமமூர்த்தி, என்ஜினீயர்கள் கிருஷ்ண குமார், சுப்பிரமணியன், புண்ணியமூர்த்தி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் ஆகிய 11 பேரை தமிழக அரசு நியமித்தது.

இந்த நியமன நடவடிக்கை சட்டவிதிகளின் படியும், சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள நெறிமுறைகளின் படியும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி விசாரித்த ஐகோர்ட்டு டி.என். பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது.“மேல்முறையீட்டு மனுவில் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 11 பேரும் தகுதி வாய்ந்தவர்கள். பொது நிர்வாகப் பணிகளில் அனுபவம் பெற்று இருப்பவர்கள். உறுப்பினர்களின் தகுதி, பொது வாழ்வு பின்னணி, அனுபவம் போன்ற கூறுகளை சென்னை ஐகோர்ட்டு கவனத்தில் கொள்ளாமல் தீர்ப்பளித்துள்ளது.

 எனவே இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.இந்த மனு மீதான விசாரணை முடிவுக்கு வந்ததையடுத்து இன்று தீர்ப்பு வழங்கிய  சுப்ரீம் கோர்ட்டு, டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட   11 பேரின் நியமனம் செல்லாது என்று உத்தரவிட்டது. மேலும், டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் நியமனத்தில் வெளிப்படத்தன்மை அவசியம் எனவும் 11 பேரில் நீதிபதி ராமமூர்த்தி  டி.என்.பி.எஸ் சி உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராமமூர்த்தியை தவிர மீதி 10 பேரும் உறுப்பினராக மீண்டும் விண்ணப்பிக்கலாம்” என்றார். 

Next Story