நான்தான் சமாஜ்வாடி கட்சி தலைவர், கட்சியின் சின்னம் என்னுடனே இருக்கும்: முலாயம் சிங் யாதவ்

நான்தான் சமாஜ்வாடி கட்சி தலைவர், கட்சியின் சின்னம் என்னுடனே இருக்கும்: முலாயம் சிங் யாதவ்
x
தினத்தந்தி 9 Jan 2017 10:18 AM GMT (Updated: 2017-01-09T15:48:44+05:30)

சமாஜ்வாடி கட்சியின் தலைவராக தானே இன்னும் நீடிப்பதாகவும், அகிலேஷ் யாதவால் கூட்டப்பட்ட கூட்டம் சட்டவிரோதம் என்றும் தேர்தல் ஆணையத்திடம் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சமாஜ்வாடி கட்சியின் தலைவராக தானே இன்னும் நீடிப்பதாகவும், அகிலேஷ் யாதவால் கூட்டப்பட்ட கூட்டம் சட்டவிரோதம் என்றும் தேர்தல் ஆணையத்திடம் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

தனது ஆதரவாளர்கள் அமர்சிங், ஷிவ்பால் சிங் யாதவ் ஆகியோருடன் தேர்தல் ஆணையரை சந்தித்த முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவால் சமர்பிக்கப்பட்ட பிரமாணப்பத்திரங்கள் போலியானது எனவும் அவற்றை ஆராயுமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், சமாஜ்வாடி கட்சி கூட்டத்தை கூட்டி அகிலேஷ் யாதவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த ராம்கோபால் யாதவ், அதற்கு முன்பே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும் எனவே ராம்கோபால் யாதவ் கூட்டிய கூட்டம் சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணையத்திடம் முலாயம் சிங் யாதவ் கூறியதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்தன.

Next Story