காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 பேர் பலி


காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 பேர் பலி
x
தினத்தந்தி 9 Jan 2017 8:30 PM GMT (Updated: 2017-01-10T01:12:49+05:30)

காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள அக்னூர் பகுதியில் பட்டால் என்ற கிராமத்தில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை 1 மணியளவில் பயங்கரவாதிகள் சிலர் இந்த ராணுவ முகாம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் முகாமில் வேல

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள அக்னூர் பகுதியில் பட்டால் என்ற கிராமத்தில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது.

நேற்று அதிகாலை 1 மணியளவில் பயங்கரவாதிகள் சிலர் இந்த ராணுவ முகாம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் முகாமில் வேலை பார்த்து வந்த உள்ளூர் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

2–க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும், அவர்கள் எல்லை வழியாக ஊடுருவி வந்திருக்கக்கூடும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

தாக்குதலை தொடர்ந்து அங்கு கூடுதல் ராணுவத்தினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து கோர், ஜூரியன் மற்றும் அக்னூரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்கள் உஷார் நிலையில் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story