5 மாநில தேர்தல் எதிரொலி: மோடியின் விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் தேர்தல் ஆணையத்திடம், காங்கிரஸ் புகார்


5 மாநில தேர்தல் எதிரொலி: மோடியின் விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் தேர்தல் ஆணையத்திடம், காங்கிரஸ் புகார்
x
தினத்தந்தி 9 Jan 2017 8:45 PM GMT (Updated: 2017-01-10T01:12:51+05:30)

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் கே.சி.மிட்டல், தேர்தல் ஆணையத்திடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– தேர்த

புதுடெல்லி

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் கே.சி.மிட்டல், தேர்தல் ஆணையத்திடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:–

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி 5 மாநில முதல்–மந்திரிகளின் விளம்பர பதாகைகள் உடனடியாக அகற்றப்பட்டன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் அடங்கிய விளம்பர பதாகைகள் பெட்ரோல் பங்குகள், கியாஸ் நிறுவனங்கள் உள்பட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பார்வையில் படும்படி இன்னமும் உள்ளன.

மத்திய அரசு விளம்பரங்களிலும் மோடி படத்துடன் கூடிய விளம்பர பதாகைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மோடியின் விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை நேர்மையாகவும், ஒளிவு மறைவு இன்றியும் நடத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story