மாயாவதி சகோதரருக்கு ரூ.1300 கோடி சொத்து வருமான வரித்துறை விசாரணை


மாயாவதி சகோதரருக்கு ரூ.1300 கோடி சொத்து வருமான வரித்துறை விசாரணை
x
தினத்தந்தி 10 Jan 2017 7:02 AM GMT (Updated: 10 Jan 2017 7:02 AM GMT)

மாயாவதி சகோதரர் ரூ.1300 கோடி சொத்து சேர்த்து உள்ளதாக புகார் எழுந்து உள்ளது இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.

புதுடெல்லி,

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உத்தரபிரதேச முதல்- மந்திரியாக இருந்தபோது முறைகேடாக சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத் தப்பட்டது.
இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாயா வதியின் சகோதரர் அனந்த குமார் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அனந்தகுமாரின் மொத்த சொத்து மதிப்பு ரு.7.5 கோடி யாக இருந்தது.

தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.1316 கோடி யாக உயர்ந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திடீரென சில ஆண்டு களுக்குள் அவர் சொத்து மதிப்பு  எப்படி இந்த அள வுக்கு உயர்ந்தது என்பது வருமான வரித்துறை அதி காரிகளுக்கு ஆச்சரியத்தை யும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ரூ.1300 கோடி சொத்து சேர்த்துள்ள அனந்தகுமார் அதிக அளவில் வெளி யில் தன்னைப் பற்றி பிரபலப் படுத்தி  கொள்ளாதவர். ஓசையின்றி அவர் சொத்து சேர்த்து இருப்பது விமர் சனத்துக்குள்ளாகி இருக் கிறது.நிறைய நிறுவனங்களில் அனந்தகுமார் பங்குதார ராகவும் இயக்குனராகவும் இருப்பதாக அறிவிக்கப்பட் டுள்ளது. ஆனால் பல நிறு வனங்கள் போலி பெயர் களில் ஒரே முகவரியில் இருப்பது கண்டு பிடிக்கப்பட் டுள்ளது.

இதைத் தொடர்ந்து மாயாவதி சகோதரர் அனந்த குமாரின் ரூ.1300 கோடி சொத்துக்கள் பற்றி விசா ரிக்க வருமான வரித்துறை தயாராகி வருகிறது.

Next Story