சொந்த ஊரில் தாயை சந்தித்த பிரதமர் மோடி குடும்பத்துடன் காலை உணவு சாப்பிட்டார்


சொந்த ஊரில் தாயை சந்தித்த பிரதமர் மோடி குடும்பத்துடன் காலை உணவு சாப்பிட்டார்
x
தினத்தந்தி 10 Jan 2017 8:04 AM GMT (Updated: 2017-01-10T13:34:18+05:30)

குஜராத் சென்ற பிரதமர் மோடி யோகா பயிற்சியை நிறுத்தி விட்டு தாயாரை சந்தித்து காலை உணவு சாப்பிட்டார்.


காந்திநகர்,

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றுள்ளார். நேற்று அவர் காந்திநகர் ரெயில் நிலைய வளர்ச்சி திட்டம் குஜராத் வர்த்தக கண்காட்சி மற்றும் பல்வேறு திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைத்தார்.

இன்று பிற்பகல்  3.30 மணிக்கு அவர்  குஜராத் மாநில வளர்ச்சிக்காக நடைபெறும் சர்வதேச தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக இன்று காலை பிரதமர்  மோடி ஆமதாபாத் அருகில் உள்ள ரைசன் கிராமத்தில் வசிக்கும் தனது தாயார் ஹீராபாயை சந்தித்தார்.  நீண்ட நேரம் தாயாருடன்  பொழுதை கழித்தார். இதற்காக மோடி தனது வழக்கமான யோகா பயிற்சியை ரத்து செய்து விட்டு ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

தாயாருடன் அவர் காலை உணவு சாப்பிட்டார். ஹீராபாய் மோடியின் இளைய சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார்.நிகழ்ச்சியில் அவர்களும் கலந்து கொண்டனர்.


Next Story