ரூபாய் தடை: பிப்ரவரி இறுதியில் நிலைமை சீராகும் எஸ்.பி.ஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தகவல்


ரூபாய் தடை: பிப்ரவரி இறுதியில் நிலைமை சீராகும் எஸ்.பி.ஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தகவல்
x
தினத்தந்தி 10 Jan 2017 9:05 AM GMT (Updated: 2017-01-10T14:35:55+05:30)

ரூபாய் தடை விவகாரத்தால் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை, பிப்ரவரி மாத இறுதியில் சீராகும் என்று ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்,

ரூபாய் தடை விவகாரத்தால் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை, பிப்ரவரி மாத இறுதியில் சீராகும் என்று ஸ்டேட் வங்கியின்  தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

உயர் மதிப்புடைய ரூ.500,1000 நோட்டுக்கள் செல்லாது எனவும்  அதற்கு பதிலாக ரூ. 500, 2000 தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.  பணத்தை வங்கிகளில் மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைந்தது. டிச.30 க்கு பிறகு நிலைமை சீராகும் என்று மத்திய அரசு கூறியிருந்த நிலையிலும், தற்போது வரை வங்கிகளிலோ அல்லது ஏ.டி.எம்களிலோ பணம் எடுக்க முழுமையாக கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை. இதனால்,வங்கிகளில் இயல்பு நடவடிக்கை திரும்பவில்லை. 

 8-வது துடிப்பான குஜராத் உச்சி மாநாடு அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் வந்த  எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- “ இந்த நிலைமை( ரூபாய் நோட்டு தடையால் ஏற்பட்ட பிரச்சினை) பிப்ரவரி இறுதியில் முழுவதும் சீரடையும் என்று நம்புகிறோம்.

வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்க கூடாது என்பதை உறுதி செய்ய போதுமான அளவு பணத்தை நாங்கள் எங்கள் கிளை வங்கிகளுக்கு அனுப்பினோம். இதன் காரணமாகவே வாடிக்கையாளர்கள் சிரமம் இன்றி பணம் எடுக்க முடிந்தது. துடிப்பான குஜராத் மாநாட்டில், டிஜிட்டல் மயமாக்கத்தை ஊக்கப்படுத்துவது குறித்து விவாதித்தோம். பண மதிப்பிழப்புக்கு முந்தைய நடவடிக்கையே நாங்கள் தொடர்ந்தால், எந்த பயனும் அது அளிக்காது. எனவே டிஜிட்டல் மயத்தை ஊக்கப்படுத்துவது குறித்து ஆலோசிக்க நாங்கள் விரும்புகிறோம். டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும்.” என்றார்.


Next Story