சாதிய உணர்வுடன் செயல்படுகிறார்; மாநில மந்திரி மீது சமாஜ்வாடி கட்சி எம்.பி. பேனி பிரசாத் குற்றச்சாட்டு

சாதிய உணர்வுடன் செயல்படுகிறார்; மாநில மந்திரி மீது சமாஜ்வாடி கட்சி எம்.பி. பேனி பிரசாத் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Jan 2017 11:46 AM GMT (Updated: 2017-01-10T17:15:59+05:30)

உத்தர பிரதேசத்தில் சாதி அடிப்படையில் காவல் துறை அதிகாரிகள் நியமனம் நடைபெறுகிறது என மாநில மந்திரி மற்றும் ராம்நகர் எம்.எல்.ஏ.வான அரவிந்த் சிங் கோபி மீது குற்றம் சாட்டி சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. பேனி பிரசாத் வர்மா தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.

பராபங்கி,

உத்தர பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் பூசல் ஏற்பட்டுள்ளது.  அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங்கிற்கும், அவரது மகன் மற்றும் முதல் மந்திரியான அகிலேஷ் யாதவிற்கும் இடையே நடந்து வரும் சண்டையினால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியான நிலையில், இருவரும் தங்களது விருப்பத்திற்கேற்ப சட்டசபை தேர்தல்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தனித்தனியே அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து அகிலேஷ் யாதவின் தீவிர ஆதரவாளர் மற்றும் எம்.எல்.ஏ.வாக இருக்கும் கோபியின் தொகுதியில் அவருக்கு பதிலாக முலாயம் சிங்கின் ஆதரவாளரான வர்மாவின் மகன் ராகேஷுக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு பேனி வர்மா எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் அறிவிப்பதற்கு சற்று முன், கிராமப்புற வளர்ச்சி துறை மந்திரி தனது சாதியை சேர்ந்த ஒருவரை பராபங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டாக கொண்டு வந்துள்ளார்.  தனது விருப்பத்தின்படி காவல் துறை உயர் அதிகாரி ஒருவரையும் கொண்டு வந்துள்ளார்.

இது நன்னடத்தை விதிமீறுதலாகும் என தெரிவித்துள்ளார்.  தனது குற்றச்சாட்டில், கடந்த ஜனவரி 6ந்தேதி போர்வை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றும் போலீசார் பாதுகாப்புடன் ராம்நகரில் நடந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story