பாதுகாப்பு படையினை இலக்காக கொண்டு நக்சலைட்டுகள் சதி; புதைந்த நிலையில் 9 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன


பாதுகாப்பு படையினை இலக்காக கொண்டு நக்சலைட்டுகள் சதி; புதைந்த நிலையில் 9 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன
x
தினத்தந்தி 10 Jan 2017 1:53 PM GMT (Updated: 10 Jan 2017 1:53 PM GMT)

சட்டீஸ்காரில் ஊடுருவல்காரர்கள் நிறைந்த சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரை இலக்காக கொண்டு மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இன்று கைப்பற்றப்பட்டன.

ராய்பூர்,

சட்டீஸ்காரில் ஊடுருவல்காரர்கள் நிறைந்த சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரை இலக்காக கொண்டு மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 9 வெடிகுண்டுகள் இன்று கைப்பற்றப்பட்டன.

இது பற்றி சுக்மா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு எலெசெலா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பேஜ்ஜி மற்றும் இஞ்ஜிராம் கிராமங்களுக்கு இடையே குச்சா சாலையில் வாய்க்கால் பாலம் ஒன்றின் அருகே வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 219வது பட்டாலியன் மற்றும் மாவட்ட ரிசர்வ் படை ஆகியவை கூட்டாக இணைந்து பேஜ்ஜி பகுதியில் இருந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.  பாதுகாப்பு படையினர் பேஜ்ஜி மற்றும் இஞ்ஜிராம் பகுதிகளுக்கு இடையே முகாம்கள் அமைத்துள்ளனர்.

அவர்கள் 2 கி.மீட்டர் தொலைவிற்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் வாய்க்கால் பாலம் ஒன்றின் அருகில் பூமிக்கடியில் வெடிகுண்டுகள் இருந்ததனை கண்டறிந்தனர்.  பாதுகாப்பு படையினரின், முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் நடக்கும் தேடுதல் பணியின்பொழுது, அவர்களை இலக்காக கொண்டு குறைந்த சக்தி கொண்ட இந்த வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து இப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறும் நிலையில் மற்ற விவரங்கள் பின்னரே தெரிய வரும் என அவர் கூறியுள்ளார்.

Next Story