கட்டாய விடுமுறை பட்டியலில் மீண்டும் பொங்கல் பண்டிகை மத்திய அரசு அறிவிப்பு


கட்டாய விடுமுறை பட்டியலில் மீண்டும் பொங்கல் பண்டிகை மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2017 10:30 PM GMT (Updated: 2017-01-11T02:57:10+05:30)

மத்திய அரசின் கட்டாய விடுமுறை நாட்கள் 14. இதுதவிர விருப்ப விடுமுறை விழாக்களாக 12 உள்ளது. அவை ஹோலி, ஜன்மாஷ்டமி, ராம நவமி, சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, பொங்கல், ஓணம், மகர சங்கராந்தி, தசராவுக்கு மேலும் ஒரு நாள், விஷூ, பஞ்சமி உள்ளிட்டவை ஆகும். இதில் 3–ஐ வ

புதுடெல்லி,

மத்திய அரசின் கட்டாய விடுமுறை நாட்கள் 14. இதுதவிர விருப்ப விடுமுறை விழாக்களாக 12 உள்ளது. அவை ஹோலி, ஜன்மாஷ்டமி, ராம நவமி, சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, பொங்கல், ஓணம், மகர சங்கராந்தி, தசராவுக்கு மேலும் ஒரு நாள், விஷூ, பஞ்சமி உள்ளிட்டவை ஆகும். இதில் 3–ஐ விருப்ப விடுமுறை நாட்களாக தேர்வு செய்ய வேண்டும்.

விருப்ப விடுமுறை நாட்கள் 3 எது என்பதை ஒவ்வொரு மாநில தலைநகரில் உள்ள அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்யும். இந்த குழு எந்த விழாக்களுக்கு விடுமுறை அளிக்க கோருகிறதோ, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். பொங்கல் பண்டிகை 2–வது சனிக்கிழமை வருகிறது. அன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை. இதனால் இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு தசராவுக்கு கூடுதல் ஒருநாள், விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி ஆகிய நாட்கள் விருப்ப விடுமுறை பட்டியலில் இருந்து தேர்வு செய்து விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை வழங்கப்படாததற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் நேற்று மீண்டும் அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக்குழு கூடி பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இதனால் தசராவுக்கு கூடுதல் ஒருநாள் விடுமுறை கிடைக்காது.


Next Story