சர்ச்சைக்குரிய பேச்சு விவகாரம்: பா.ஜனதா எம்.பி. விளக்கம் அளிக்க தேர்தல் கமி‌ஷன் நோட்டீஸ்


சர்ச்சைக்குரிய பேச்சு விவகாரம்: பா.ஜனதா எம்.பி. விளக்கம் அளிக்க தேர்தல் கமி‌ஷன் நோட்டீஸ்
x
தினத்தந்தி 10 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-11T03:24:24+05:30)

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் பேசும்போது, ‘‘நாட்டின் மக்கள் தொகை பெருகுவதற்கு இந்துக்கள் காரணம் அல்ல. 4 மனைவிகளும், 40 குழந்தைகளும் வைத்திருப்பவர்கள்தான் காரணம்’’ என்று கூறி இ

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் பேசும்போது, ‘‘நாட்டின் மக்கள் தொகை பெருகுவதற்கு இந்துக்கள் காரணம் அல்ல. 4 மனைவிகளும், 40 குழந்தைகளும் வைத்திருப்பவர்கள்தான் காரணம்’’ என்று கூறி இருந்தார்.

இது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்று தேர்தல் கமி‌ஷனுக்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து மீரட் மாவட்ட கலெக்டர் இதுபற்றி அறிக்கை அளிக்கும்படி தேர்தல் கமி‌ஷன் கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும் அறிக்கை தாக்கல் செய்தது. இதை ஆய்வு செய்த தலைமை தேர்தல் கமி‌ஷன், சாக்ஷி மகராஜ் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருப்பதை உறுதி செய்தது.

இதையடுத்து, அவருக்கு விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில், ‘‘உங்களது பேச்சு சமூகத்தில் பகைமையை தூண்டிவிடுவதாக உள்ளது. மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உங்களுடைய பேச்சில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்கான முகாந்திரமும் இருக்கிறது. எனவே உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்பதற்கான பதிலை நாளை (அதாவது இன்று) காலைக்குள் நீங்கள் தாக்கல் செய்யவேண்டும்’’ என்று கூறப்பட்டு இருக்கிறது.


Next Story