உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி ஒரே மேடையில் ராகுல்காந்தி-அகிலேஷ், பிரியங்கா-டிம்பிள்

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, காங்கிரஸ் கூட்டணி உருவாகிறது. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பிரியங்கா காந்தி, டிம்பிள் ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார்கள்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் சட்ட சபை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சமாஜ்வாடி கட்சியில் முலாயம்சிங்குக் கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் தேர்தல் பணிகள் மந்தமான நிலையில் உள்ளது.
இந்த நிலையில் சமாஜ் வாடி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தாலும் பா.ஜனதா கட்சியின் வளர்ச்சியாலும், சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத் தால்தான் ஓரளவுக்கு வெற்றி பெற முடியும் இல்லையெனில் கட்சிக்கு மேலும் வீழ்ச்சி ஏற்படும் என காங்கிரஸ் கருதுகிறது.
இதையடுத்து காங்கிரஸ் தரப்பில் இருந்து சமாஜ் வாடி கட்சிக்கு தூது விடப் பட்டது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான அணி யுடன் காங்கிரஸ் கூட்டணி சேருகிறது. அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை யால் கூட்டணி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று லக்னோவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் பேசுகையில் மத சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறி காங்கிரஸ்- சமாஜ் வாடி கூட்டணியை உறுதி செய்தார்.அப்போது காங்கிரஸ் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஷீலா தீட்சித் கூறுகையில், அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி போன்ற இளம் தலைவர்களுக்கு வழிவிட தயார் என்றார்.
இதற்கிடையே உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ்- சமாஜ்வாடி கட்சிகள் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்யவும் முடிவு செய் துள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவரும் முதல்-மந்திரியுமான அகிலேஷ்யாதவ் ஆகியோர் ஒரே மேடையில் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டணியில் பிரியங்கா காந்தியும் , அகிலேஷ்யாதவின் மனைவி டிம்பிளும் முக்கிய பங்கு வகிப்பார்கள் எனகூறப்படுகிறது.இருவரையும் ஒரே மேடையில் தோன்றி பேச வைக்கும் முயற்சிகளும்ந் நடைபெற்று வருகிறது

Next Story