நான் டெல்லி முதல்-மந்திரி, பஞ்சாப் முதல்-மந்திரியாக முடியாது - அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்


நான் டெல்லி முதல்-மந்திரி, பஞ்சாப் முதல்-மந்திரியாக முடியாது - அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்
x
தினத்தந்தி 11 Jan 2017 10:34 AM GMT (Updated: 11 Jan 2017 10:34 AM GMT)

பஞ்சாப்பில் சிரோன்மணி அகாலிதளம்–பாரதீய ஜனதா கூட்டணி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

புதுடெல்லி முதல்-மந்திரியான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்-மந்திரியாகலாம் என யூகங்கள் எழுந்து வரும் நிலையில், நான் போட்டியில் இல்லை என்பதை அவரே விளக்கிஉள்ளார். 

பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 4-ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் மாதம் 11-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலிதளம்–பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அந்த கூட்டணி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளது. 

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மனிஷ் சிசோடியா பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசுகையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்-மந்திரியாக கருதி வாக்களார்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் இவ்வாறு பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப் முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் களமிறங்கலாம் என்ற யூகமும் வலுத்தது. சிசோடியாவின் பேச்சு உடனடியாக பதிலடி கொடுத்த பஞ்சாப் துணை முதல்-மந்திரி சுக்பீர் சிங், 

“கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஓட்டளியுங்கள் என்று கூறி சிசோடியா அவர்களுடைய திட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். பஞ்சாபிகள் மீது நம்பிக்கையில்லை என்பதை ஆம் ஆத்மி நிரூபித்து உள்ளது, என்றார். பஞ்சாப் மக்கள் அவர்களுடைய திட்டத்தை மதிப்பிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் அளித்து உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் நான் முதல்-மந்திரி வேட்பாளர் மோதலில் இல்லை என்று கூறிஉள்ளார். பாட்டியாலாவில் நடைபெற்ற பேரணியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “யார் வேண்டுமென்றாலும் முதல்-மந்திரியாகலாம், வாக்குறுதிகளை செயல்படுத்துவேன் என்பதை உறுதிசெய்வேன். சிசோடியா பேசியதில் என்ன தவறு உள்ளது? நான் டெல்லி முதல்-மந்திரி, நான் பஞ்சாப் மாநில முதல்-மந்திரியாக ஆகமுடியாது,” என்று கூறிஉள்ளார். 

Next Story