மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை, தோழிகளிடம் உங்களுக்கு நேரிட்டால்? எம்.எல்.ஏ. அநாகரிக பேச்சு


மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை, தோழிகளிடம் உங்களுக்கு நேரிட்டால்? எம்.எல்.ஏ. அநாகரிக பேச்சு
x
தினத்தந்தி 11 Jan 2017 11:19 AM GMT (Updated: 2017-01-11T16:49:47+05:30)

பாதிக்கப்பட்ட மாணவியின் தோழிகள் பதிலளிக்க முடியாது அங்கிருந்து நழுவிச்செல்ல முயற்சித்த நிலையில் எம்.எல்.ஏ. பாஸ்வான் அவருடைய பலத்தை பிரயோகிக்க முயற்சித்து உள்ளார்.


பாட்னா, 

பீகாரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட மாணவியின் தோழிகளிடம் பேசிய ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. லாலான் பாஸ்வான்; “எப்படி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று நீங்கள் கூறுகிறீர்கள்... எங்கிருந்து இரத்தம் கொட்டியது?” என்று அநாகரிகமாக கேள்வி எழுப்பியது பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.  

வைசாலியில் கடந்த ஞாயிறு அன்று 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அரசு பள்ளிக்கு எம்.எல்.ஏ. பாஸ்வான் சென்று உள்ளார். கொல்லப்பட்ட மாணவியின் ஆடையில் ரத்தம் கொட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எங்கு பாலியல் பலாத்காரம் நடைபெற்றது என்பதை விசாரிப்பதற்கு எம்.எல்.ஏ. முடிவுசெய்து உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சிறு கூட்டம் இருந்த இடத்தில் எம்.எல்.ஏ. இதுபோன்ற கேள்விகளை எழுப்பியதால் பாதிக்கப்பட்ட மாணவின் தோழிகள் அசவுகரியமாக உணர்ந்து உள்ளனர். 

ஆனால் எம்.எல்.ஏ. பாஸ்வான் “நீங்க படித்தவர்கள்... உங்களால் தெளிவாக பதிலளிக்க முடியும்,” என்று பேசிஉள்ளார். 

மாணவிகள் பதிலளிக்க முடியாது அங்கிருந்து நழுவிச்செல்ல முயற்சித்த நிலையில் எம்.எல்.ஏ. அவருடைய பலத்தை பிரயோகிக்க முயற்சித்து உள்ளார். “எங்களிடம் நீங்கள் தெளிவாக சொல்லவில்லை என்றால், இதுபோன்ற நிலையானது நாளை உங்களுக்கு நேரிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? பலாத்காரம் செய்பவன் உங்களுடைய அறைக்கு பிரவேசித்தால் பின்னர் என்ன நடக்கும்? என்று அடுக்கடுக்காக மோசமான முறையில் பேசிஉள்ளார். இவை அனைத்தும் அங்கிருந்த கேமராவில் பதிவாகிஉள்ளது. 

மேலும் பள்ளி தங்கும் விடுதியில் தங்கிஉள்ள மாணவிகளுக்கு ஆண்களுடன் தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டிஉள்ள பாஸ்வான், எப்படி உதவி கிடைக்காமல் குற்றவாளி உள்ளே வந்திருக்க முடியும் என வரம்பை மீறி குறுக்கு விசாரணையும் நடத்திஉள்ளார். ஆசிரியர்கள் பக்கம் திரும்பிய பாஸ்வான், யாரேனும், உங்களில் ஒருவர் கூட குற்றவாளிக்கு உதவியிருக்க முடியும் என பேசிஉள்ளார். இவ்வளவு மோசமாக நடந்துக் கொண்ட எம்.எல்.ஏ. பாஸ்வானும் இறுதியில் மாணவிகளுக்கு உதவி செய்ததான் நான் முயற்சிசெய்தேன் என்று பேசிஉள்ளார் பெருமையாக.

“தலித் பிரிவை சேர்ந்த மாணவிகளுக்கு உதவிசெய்ய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாகும், எனவேதான் நான் மாணவர்களிடம் இது தொடர்பான தகவல்களை பெற்றேன்... மீடியாக்கள் கற்பனையாக இவ்வீடியோவை வெளியிட்டு உள்ளது,” என்று கூறிஉள்ளார் பாஸ்வான். 

Next Story