ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு கடிதம் மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் | ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஐயப்பன் மீண்டும் மார்ச் 8ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு | லோக்பால் அமைப்புக்கு தலைவரை நியமிப்பது தொடர்பாக மார்ச்.1ஆம் தேதி ஆலோசனை - மத்திய அரசு | முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் இணைந்துவிடுவார்கள் - தினகரன் | திருவண்ணாமலையில் 3 ஸ்கேன் மையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு | முதல்வர் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை - எச்.ராஜா |

தேசிய செய்திகள்

மலேசியா விமானங்களில் வெடிகுண்டு இன்டர்போல் எச்சரிக்கை; மும்பையில் தீவிர சோதனை + "||" + Massive search on 3 Malaysia-bound planes in Mumbai following Interpol alert

மலேசியா விமானங்களில் வெடிகுண்டு இன்டர்போல் எச்சரிக்கை; மும்பையில் தீவிர சோதனை

மலேசியா விமானங்களில் வெடிகுண்டு இன்டர்போல் எச்சரிக்கை; மும்பையில் தீவிர சோதனை
மும்பையில் இருந்து மலேசியா புறப்படும் விமானங்களில் வெடிகுண்டு இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டது. இதனையடுத்து. விமானங்களில் தீவிர சோதனையை பாதுகாப்பு படை நடத்திஉள்ளது.

 மும்பை, 

மலேசியா செல்லும் விமானங்களில் வெடிகுண்டு இருக்கலாம் என இன்டர்போல் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானங்களில் தீவிர சோதனையை பாதுகாப்பு படை நடத்திஉள்ளது. 

விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் மற்றும் அவர்களுடைய உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

கடந்த திங்கள் கிழமை அன்று இன்டர்போலிடம் இருந்து வெடிகுண்டு தாக்குதல் எச்சரிக்கை அடங்கிய செய்தியானது இந்திய பாதுகாப்பு முகமைகளுக்கு கிடைத்து உள்ளது. மும்பையில் இருந்து மலேசியா புறப்படும் விமானங்களில் வெடிகுண்டு இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று செவ்வாய் கிழமை காலை வரையில் மலேசியா செல்லவிருந்த விமானங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சோதனை முடிவில் எந்தஒரு சந்தேகத்திற்கு இடமான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன. 

எச்சரிக்கை கிடைத்ததை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு முகமைகள் விமானத்தில் இருந்த பயணிகளை கீழே இறங்க கூறி சோதனையில் ஈடுபட்டு உள்ளது என்று தகவல்கள் குறிப்பிட்டு உள்ளன.