தேசிய செய்திகள்

தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை + "||" + Foreign-funded NGOs Federal Government Warning

தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
நிதி உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் ஆன்லைனில் கணக்கு காட்டாவில்லை நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,

32 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் பெறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை கண்காணிக்க எந்த வழிமுறையையும் உருவாக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று  கேள்வி விடுத்தது. இதையடுத்து, வெளிநாட்டு நிதி உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம்  எச்சரிக்கை விடுத்தது.

அதில், அந்த நிறுவனங்கள், 2014–2015–ம் நிதி ஆண்டில் இருந்து தங்களது வருடாந்திர கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

மேலும், முந்தைய வழக்கப்படி, காகித வடிவில் தாக்கல் செய்யப்படும் கணக்குகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தெரிவித்துள்ளது.