பெண்களின் மொபைல் எண்களை விலைக்கு விற்கும் ரீசார்ஜ் கடைகள் அழகிய பெண்களின் எண்கள் ரூ.500


பெண்களின் மொபைல் எண்களை விலைக்கு விற்கும் ரீசார்ஜ் கடைகள் அழகிய பெண்களின் எண்கள் ரூ.500
x
தினத்தந்தி 3 Feb 2017 10:01 AM GMT (Updated: 2017-02-03T16:00:04+05:30)

உத்தரபிரதேச மாநிலத்தில் ரீசார்ஜ் கடைகளில் இளம் பெண்களின் மொபைல் போன் எண்கள் விலைக்கு விற்கபடுவதை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

புதுடெல்லி

மொபைல் போன்கள் வாழ்வில் இன்றியமையாததாக ஆகி விட்டன. மொபைல் போன் வைத்திருப்பவர்களில் அதிகமான பேர் ப்ரீபெய் டு கனெக்‌ஷன் தான் உபயோகப் படுத்துகிறார்கள்.

சமீப வருடங்களில் நாட்டில் கூட்டம் அதிகமாக உள்ள இடம் ரீ சார்ஜ் கடைகள். அதிலும் குறிப்பாக இளம்பெண்கள்.  பத்து ரூபாயிலிருந்து தொடங்கி ப்ரீ-பெய்டு மொபைலுக்கு இங்கே தான் டாப்-அப் செய்கிறார்கள்
.
நீங்கள் தொடர்ந்து இப்படி ப்ரீ-பெய்டு டாப்-அப் செய்ய கடைகளுக்குச் செல்கிறீர்களா? உங்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட் இது. கடைகளில் டாப்-அப் செய்யக் கேட்கும்போது ஒரு நோட்டுப் புத்தகத்தில் உங்கள் கைபேசி எண்ணை குறித்து வைப்பார்கள். ஆனால் அந்த நம்பரை என்ன செய்கிறார்கள்.?

பெண்களே மொபைல் டாப்-அப் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த செய்தி?

உத்தரபிரேத மாநிலபோலீசாருக்கு மொபைல் போன் மூலமாக பெண்கள் அதிக அளவு டீசிங் செய்யப்படுகிறார்கள் என புகார் வந்தது. இதை தொடர்ந்து உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உதவி மையம் ஒன்றை அமைத்தார். மேலும் மொபைல் போன்களில் பெண்கள் கிண்டல் மற்றும் கேலி செய்யபட்டால் புகார் தெரிவிக்க சிறப்பு எண் 1090  என அறிவித்தார்.

கடந்த 4 வருடங்களில் இந்த உதவி மையத்தில் 6 லட்சம் புகார்கள் குவிந்து உள்ளன.இந்த புகார்களில் 90 சதவீதம் போன் மூலம்  துன்புறுத்தப்படுவதாக பதிவானது.

போலீசார் விசாரணையில் இளம் பெண்களின் போன் எண்கள் ரீசார்ஜ் கடைகள் மூலம் வெளிப்படுத்தப்படுவதாக தெரியவந்தது. மேலும்  இளம் பெண்களின் மொபைல் எண் கொடுக்க ரீசார்ஜ் கடைகள் பணம் வாங்கி உள்ளன எனவும் தெரிய வந்தது. மிகவும் அழகான பெண் மொபைல் போன் எண் கிடைக்க வேண்டும் என்றால் ரூ. 500 வரை வசூல் செய்து உள்ளனர். சராசரி பெண்களின் எண்களுக்கு ரூ. 50 வரை  வசூலித்து உள்ளனர்.

 உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோ, கான்பூர், அலகாபாத், வாரனாசி, ஆக்ரா,சரஸ்வதி, காஷ்கஞ்ச்,லலித்பூர்,சித்ராகூட், கவுசாமி ஆகிய மாவட்டங்களில் இந்த புகார்கள் பதிவாகி உள்ளன.


Next Story