வயது வரம்பு 30 ஆக நிர்ணயம் ‘நீட்’ தேர்வை 3 தடவை மட்டுமே எழுத முடியும்


வயது வரம்பு 30 ஆக நிர்ணயம் ‘நீட்’ தேர்வை 3 தடவை மட்டுமே எழுத முடியும்
x
தினத்தந்தி 3 Feb 2017 11:15 PM GMT (Updated: 2017-02-04T03:59:51+05:30)

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு (நீட்) இந்த ஆண்டு மே 7–ந் தேதி நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ. இத்தேர்வை நடத்துகிறது.

புதுடெல்லி,

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு (நீட்) இந்த ஆண்டு மே 7–ந் தேதி நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ. இத்தேர்வை நடத்துகிறது. தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 25 என்று மத்திய சுகாதார அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.

இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 5 ஆண்டு வயது தளர்வு அளிக்கப்படும். எனவே, அவர்களுக்கான வயது வரம்பு 30 ஆகும். ஆனால், அனைத்து பிரிவினரும் அதிகபட்சம் 3 தடவை மட்டுமே தேர்வு எழுத முடியும்.

இந்த ஆண்டு எழுதும் தேர்வுதான், முதல் தடவையாக கணக்கில் கொள்ளப்படும். இதற்கு முன்பு எழுதப்பட்ட மருத்துவ நுழைவுத்தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்பதால், அத்தேர்வுகளில் பங்கேற்றவர்களும் இனிமேல் 3 தடவை தேர்வு எழுதலாம். 

Next Story