சசிகலா முதல்வரானால் பொறுக்கிகள் மீது நடவடிக்கை வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி சொல்கிறார்


சசிகலா முதல்வரானால் பொறுக்கிகள் மீது நடவடிக்கை வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி சொல்கிறார்
x
தினத்தந்தி 4 Feb 2017 9:29 AM GMT (Updated: 2017-02-04T14:59:02+05:30)

சசிகலா முதல்வரானால் பொறுக்கிகள் மீது நடவடிக்கை வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தமிழக முதல் அமைச்சராக சசிகலா வரும் 9 ஆம் தேதி பதவியேற்க கூடும் என்று யூகங்கள் பரவி வருகின்றன.  அதிமுக தலைமை அலுவலகத்தில்  நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சசிகலா முதல் அமைச்சராவது குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்  என பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த நிலையில், சசிகலா திங்கள் கிழமை  முதல் அமைச்சராக பதவி ஏற்றால் பொறுக்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். முன்னதாக பொறுக்கிகள் என்று சுப்ரமணியன் சுவாமி விமர்சித்து இருந்தது கடும் சலசலப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம்.
.

Next Story