வீடியோ: பெண்ணின் அஜாக்கிரதையால் சாலையில் ஏற்பட்ட பெரும் விபத்து


வீடியோ: பெண்ணின் அஜாக்கிரதையால்  சாலையில் ஏற்பட்ட பெரும் விபத்து
x
தினத்தந்தி 6 Feb 2017 8:02 AM GMT (Updated: 2017-02-06T13:32:12+05:30)

இந்தியாவில் பெண் ஒருவரின் அஜாக்கிரதையால் சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலே குறித்த விபத்து இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த வீடியோவில், பெண் ஒருவர் சாலையை மெதுவாக கடக்கிறார். ஒரு ஆட்டோ வாகன்ம் திடீரென வேகமாக வர, அந்த பெண் நகராமல் நிற்கிறார்.

எதிரே வந்த வாகன்  ஓட்டுநர் விபத்தை தவிர்க்கவாகனத்தை திருப்ப அது அருகில் சென்றுக்கொண்டிருந்த இரு சக்கர வண்டி மீது மோதி கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்படுகிறது.

இதில், வாகனம் தலைகீழாக கவிழ்கிறது. இரு சக்கர வண்டியில் பயணித்தவர்களும், வாகனத்தில் பயணித்தவர்களுக்கும் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்து ஏற்பட காரணமாக இருந்த பெண் சாலையை சாதாரணமாக கடந்து செல்கிறார்.

Next Story