பறவை மோதியதால் டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூரில் தரையிறக்கம்


பறவை மோதியதால் டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம்  ஜெய்ப்பூரில் தரையிறக்கம்
x
தினத்தந்தி 6 Feb 2017 4:19 PM GMT (Updated: 2017-02-06T21:49:15+05:30)

பறவை மோதியதால் டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லிக்கு 122 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, விமான என்ஜின் பகுதியில் பறவை ஒன்று மோதியது. இதில் என்ஜின் பிளேடு சேதம் அடைந்தது. எட்டு என்ஜின் பிளேடுகள் சேதம் அடைந்தையடுத்து விமானத்தில் அதிர்வு உணரப்பட்டது. 

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏர் இந்தியா விமானம் உடனடியாக ஜெய்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். அவசரமாக டெல்லி செல்ல வேண்டியர்கள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். வெளிநாட்டு பயணிகள் டாக்ஸி மூலம் டெல்லி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. 

விமானத்தை சரி செய்யும் பணியில் பொறியியல் வல்லுநர்கள் ஈடுபட்டனர். 3-4 தினங்களில் விமானம் சீர் செய்யப்படும் என்று  ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Next Story