டெல்லியில் கொள்ளையர்களின் துப்பாக்கி சூட்டில் 2 போலீசார் காயம்


டெல்லியில் கொள்ளையர்களின் துப்பாக்கி சூட்டில் 2 போலீசார் காயம்
x
தினத்தந்தி 6 Feb 2017 9:32 PM GMT (Updated: 2017-02-07T03:02:42+05:30)

டெல்லி பிரகாலாத்பூர் பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் பல்வேறு கொள்ளை, கொலை முயற்சிகள் தொடர்பாக போலீசார் அக்பர், ஆசிப் என்னும் இருவரை தேடி வந்தனர்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள புல் பிரகாலாத்பூர் பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் பல்வேறு கொள்ளை, கொலை முயற்சிகள் தொடர்பாக போலீசார் அக்பர், ஆசிப் என்னும் இருவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ‘நேரு பிளேஸ்’ மெட்ரோ ரெயில் நிலைய பகுதியில் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியை முற்றுகையிட்டு, கொள்ளையர்கள் இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது, கொள்ளையர்கள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து போலீசாரும் துப்பாக்கியால் சுட்டு தக்க பதிலடி கொடுத்தனர்.

சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் போலீசார் 2 பேர் காயம் அடைந்தனர். இதற்கிடையே அக்பரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். ஆசிப் தப்பியோடி விட்டார். அக்பர் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று டெல்லி போலீசார் ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story