ஐ.எஸ். இயக்கத்தினருடன் தொடர்பா? தமிழக வாலிபரை விசாரிக்க ராஜஸ்தான் போலீசார் முடிவு


ஐ.எஸ். இயக்கத்தினருடன் தொடர்பா? தமிழக வாலிபரை விசாரிக்க ராஜஸ்தான் போலீசார் முடிவு
x
தினத்தந்தி 6 Feb 2017 9:54 PM GMT (Updated: 2017-02-07T03:24:17+05:30)

ஐ.எஸ். இயக்கத்தினருக்கு நிதி சேகரித்து வந்த ஜமில் அகமது என்பவரை ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்பு படை போலீசார் கடந்த நவம்பர் மாதம் கைது செய்தனர்.

ஜெய்ப்பூர்,

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். இயக்கத்தினருக்கு நிதி சேகரித்து வந்த ஜமில் அகமது என்பவரை ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்பு படை போலீசார் கடந்த நவம்பர் மாதம் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, தமிழகத்தை சேர்ந்த முகமது இக்பால் (வயது 35) என்பவருடன் தனது தொடர்பு குறித்து சில தகவல்களை அளித்துள்ளார்.

எனவே இக்பாலின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்த நிலையில், ரூ.1 கோடி மதிப்புள்ள 20 தங்கக்கட்டிகளை வைத்திருந்ததாக அவர் மீது வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது ஜமில் முகமதுவுடனான தனது தொடர்புகள் குறித்து அதிகாரிகளிடம் இக்பால் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவரை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ள தீவிரவாத எதிர்ப்பு படை போலீசார், ஜெய்ப்பூருக்கு கொண்டு சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் முகமது இக்பாலுக்கு, ஜமில் அகமதுவுடன் தொடர்பு இருந்தது நிரூபிக்கப்பட்டால், அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story