பாராளுமன்ற வளாகத்தில் ‘மர்ம’ பை பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி


பாராளுமன்ற வளாகத்தில் ‘மர்ம’ பை பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 6 Feb 2017 9:56 PM GMT (Updated: 2017-02-07T03:26:27+05:30)

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று காலையில் பாராளுமன்றத்துக்கு வந்தனர்.

அப்போது அங்குள்ள மகாத்மாகாந்தி சிலை அருகே பை ஒன்று அனாதையாக கிடந்தது. பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வந்து செல்லும் பகுதியில் மர்ம பை கிடப்பதை பார்த்து, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த வீரர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அந்த பையை எடுத்து சோதனையிட்டனர்.

ஆனால் அதில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலான எந்த பொருளும் இல்லை. இதன் பின்னரே பாதுகாப்பு படையினர் நிம்மதியடைந்தனர். அந்த பை யாருடையது என்று விசாரணை நடத்தப்பட்டது.

முன்னதாக அகமது எம்.பி. மரணம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்திய அரசை கண்டித்து மகாத்மா காந்தி சிலைக்கு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி உள்பட ஏராளமான எம்.பி.க்கள் இந்த தர்ணாவில் பங்கேற்றனர்.


Next Story