டெல்லியில் கைலாஷ் சத்யார்த்தியின் வீட்டில் திருட்டு, நோபல் பரிசும் திருடு போனது


டெல்லியில் கைலாஷ் சத்யார்த்தியின் வீட்டில் திருட்டு, நோபல் பரிசும் திருடு போனது
x
தினத்தந்தி 7 Feb 2017 9:35 AM GMT (Updated: 2017-02-07T15:05:45+05:30)

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் வீட்டை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் நேற்று நோபல் பரிசு உட்பட பல பொருட்களை அள்ளிச்சென்றனர்

புதுடெல்லி,

இந்தியாவை சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலா ஆகியோர் இணைந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றனர்.சமூக ஆர்வலரான சத்யார்த்தி இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்காக போராடி வருகிறார். டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒடு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கைலாஷ் சத்யார்த்தியின் வீடு உள்ளது. 

இந்த வீட்டை நேற்று இரவு உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பல பொருட்களை அள்ளிச்சென்றனர். அவரது நோபல் பரிசு ஆவணமும் இதில் அடங்கும்.சத்யார்த்தியின் மகனும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான புவன் ரிபு இன்று டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். கைலாஷ் சத்யார்த்தி தற்போது வெளிநாட்டில் உள்ளார். 

Next Story