மும்பையில் 2 நாட்களுக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து


மும்பையில் 2 நாட்களுக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து
x
தினத்தந்தி 7 Feb 2017 11:35 AM GMT (Updated: 2017-02-07T21:23:10+05:30)

மும்பையில் 2 நாட்களுக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

மும்பை,

சசிகலா தமிழக முதல் அமைச்சராக  பதவி ஏற்பது எப்போது என்பதில் தெளிவின்மை நீடிக்கிறது. சசிகலா முதல் அமைச்சராக பதவி ஏற்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் வித்யாசகர் ராவ் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள்  கூறப்படுகிறது.

இந்த நிலையில், மும்பையில் 2 நாட்களுக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் பங்கேற்க விருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக மகராஷ்டிர ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை வித்யாசகர் ராவ் சென்னை செல்வார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story