ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு


ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Feb 2017 10:07 AM GMT (Updated: 2017-02-08T15:37:36+05:30)

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மும்பை,

மும்பையில் இன்று ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகியகால கடன் வட்டி (ரெப்போ) விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரெப்போ விகிதத்தை 6.25 சதவீதமாகவே நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. 

ரிவர்ஸ் ரெப்போ 5.75 சதவீதமாக இருக்கும். உள்நாட்டு மொத்த உற்பத்தி 2016-17 ஆண்டில் 6.9 சதவீதம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது, மேலும்,  2017-18 ஆண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 7.4 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தெரிவித்துள்ளார். 

மொத்த ரொக்க கையிருப்பு விகிதமும் (சிஆர்ஆர்) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும், அது 4 சதவீதமாகவே நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story