கவர்னரின் செயல் மரபு அல்ல பதவி பிரமாணம் செய்து வைக்க தாமதிக்க கூடாது காங்கிரஸ் வலியுறுத்தல்


கவர்னரின் செயல் மரபு அல்ல பதவி பிரமாணம் செய்து வைக்க தாமதிக்க கூடாது காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Feb 2017 9:00 PM GMT (Updated: 2017-02-09T01:27:52+05:30)

அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி எம்.பி., தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேட்டி அளித்தார்.

புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி எம்.பி., நேற்று பாராளுமன்ற வளாகத்தில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பா.ஜனதாவும், மத்திய அரசும் தமிழ்நாட்டில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கின்றன. அது, மிகவும் தவறானது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. கவர்னர் வித்யாசாகர் ராவை தமிழ்நாட்டுக்கு போக வேண்டாம் என்று உத்தரவிட அவர்களுக்கு உரிமை இல்லை.

ஓ.பன்னீர்செல்வமோ அல்லது சசிகலாவோ, யார் பெரும்பான்மையை நிரூபித்தாலும், அவர்களுக்கு கவர்னர் உடனடியாக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். ஒரு நிமிடம் கூட அதற்கு தாமதம் செய்யக்கூடாது. பதவி பிரமாணம் செய்து வைப்பதை கவர்னர் காலதாமதம் செய்வது மரபோ, நடைமுறையோ அல்ல. அரசியல் சட்டத்திலும் அப்படி கூறப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story