பாராளுமன்றம் மார்ச் 9–ந் தேதிக்கு ஒத்திவைப்பு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவிப்பு


பாராளுமன்றம் மார்ச் 9–ந் தேதிக்கு ஒத்திவைப்பு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Feb 2017 10:45 PM GMT (Updated: 9 Feb 2017 7:55 PM GMT)

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31–ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1–ந் தேதி மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது

புதுடெல்லி,

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31–ந் தேதி தொடங்கியது. மறுநாள் பிப்ரவரி 1–ந் தேதி மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு முதன் முதலாக பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரெயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக பட்ஜெட் உரையின் மீது விவாதம் நடைபெற்றது.

அந்த விவாதத்துக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பதில் அளித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி, பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் சபையில் இருந்தனர். அருண் ஜெட்லி உரையாற்றி முடித்ததும், சபையை அடுத்த மாதம் (மார்ச்) 9–ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. 2–வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 9–ந் தேதி தொடங்கும்.


Next Story