லக்னோவில் பயங்கரவாதி கொல்லப்பட்ட இடத்தில் இருந்து ஆயுதங்கள், ஐ.எஸ். கொடி பறிமுதல்


லக்னோவில் பயங்கரவாதி கொல்லப்பட்ட இடத்தில் இருந்து ஆயுதங்கள், ஐ.எஸ். கொடி பறிமுதல்
x
தினத்தந்தி 8 March 2017 4:32 AM GMT (Updated: 8 March 2017 4:31 AM GMT)

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கொல்லப்பட்ட பயங்கரவாதி இருந்த இடத்தில் இருந்து ஆயுதம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய பிரதேசத்தில் ரெயிலில் குண்டு வெடித்ததில் தொடர்புடைய ஐ.எஸ். பயங்கரவாதி முகமது சைபுல்லை உத்தரபிரதேச போலீசார் துப்பாக்கி சண்டையில் சுட்டுக் கொன்றனர். நேற்று மாலை பயங்கரவாதியை சுற்றி வளைத்த உ.பி. பயங்கரவாத தடுப்பு படை சரண் அடையுமாறு கேட்டது, ஆனால் பயங்கரவாதி வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு சுவரை இடித்து துவாரம் அமைத்து அதன்வழியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினான். சுமார் 10 மணி நேரமாக நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி முகமது சைபுல் கொல்லப்பட்டான். இதனையடுத்து ஐ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களை வேட்டையாடும் பணி தொடங்கி உள்ளது.

இதற்கிடையே பயங்கரவாதி முகமது சைபுல் கொல்லப்பட்ட அறையில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், கத்திகள் என பல்வேறு ஆயுதங்களை போலீஸ் பறிமுதல் செய்து உள்ளது. பாஸ்போர்ட்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத கொடி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பயங்கரவாதி முகமது சைபுல் தங்கியிருந்த அறையில் ரெயில்களில் கால அட்டவணை அடங்கிய தகவல்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான ஆப்ரேஷன் தொடர்பாக உ.பி. டிஜிபி ஜாவித் அகமது பேசுகையில், கான்பூர் மற்றும் அதனை சுற்றிய பகுதியில் மூவர் சிக்கிஉள்ளனர் என கூறிஉள்ளார். 

இதற்கிடையே பயங்கரவாதியுடன் மாணவர்கள் போர்வையில் தங்கியிருந்த இருவரை பயங்கரவாத தடுப்பு படை தேடிவருகிறது.


Next Story