85 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது இந்திய வெளியுறவுத்துறை


85 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது இந்திய வெளியுறவுத்துறை
x
தினத்தந்தி 9 March 2017 2:26 PM GMT (Updated: 2017-03-09T19:55:55+05:30)

இலங்கை சிறைகளில் உள்ள 85 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இது தொடர்பாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே கூறியதாவது:

இலங்கை சிறைகளில் உள்ள 85 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது. மீனவர் மீதான துப்பாக்கிச்சூடு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என இலங்கை உறுதி அளித்துள்ளது.  துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இலங்கை அரசின் முழு விசாரணை முடியும் வரை காத்திருப்போம். இந்திய, இலங்கை அரசுகள் இடையேயான பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறும். பேச்சுவார்த்தை ரத்து என வெளியான தகவல் உண்மையில்லை. 

இவ்வாறு அதில் கூறிப்பட்டுள்ளது.

Next Story