கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்


கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்
x
தினத்தந்தி 9 March 2017 9:00 PM GMT (Updated: 2017-03-10T01:30:12+05:30)

10 ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு வசதிகளுடன், கூடுதல் அம்சங்களையும் சேர்த்து விரைவில் புதிய நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

மும்பை,

10 ரூபாய் நோட்டுகளில் தற்போது இருக்கும் பாதுகாப்பு வசதிகளுடன், கூடுதல் அம்சங்களையும் சேர்த்து விரைவில் புதிய நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. மகாத்மா காந்தி–2005 வரிசையிலான இந்த நோட்டுகளில் இரு வரிசை எண் பகுதியிலும் ஆங்கில எழுத்து ‘எல்’ சேர்க்கப்படும். அச்சிடப்படும் ஆண்டான 2017, ரூபாய் நோட்டின் பின்பகுதியில் பொறிக்கப்படும்.

இரு வரிசை எண்களும் ஏறுவரிசை அளவில் அச்சிடப்பட்டு இருக்கும். எனினும் முதல் 3 எண்களில் (எண் மற்றும் எழுத்து) எந்த மாறுதலும் இருக்காது. இந்த நோட்டுகளில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் கையெழுத்தும் இடம் பெற்று இருக்கும் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

புதிய 10 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் அனைத்து விதமான 10 ரூபாய் நோட்டுகளும் சட்டப்படி செல்லும் எனவும் ரிசர்வ் வங்கி அந்த அறிக்கையில் கூறியுள்ளது.


Next Story