கியாஸ் இருப்பு எவ்வளவு? என்பதை காட்டும் நவீன சிலிண்டர்கள்


கியாஸ் இருப்பு எவ்வளவு? என்பதை காட்டும் நவீன சிலிண்டர்கள்
x
தினத்தந்தி 9 March 2017 11:15 PM GMT (Updated: 9 March 2017 8:28 PM GMT)

கியாஸ் இருப்பு எவ்வளவு? என்பதை காட்டும் நவீன சிலிண்டர்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதுடெல்லி

கியாஸ் இருப்பு எவ்வளவு? என்பதை காட்டும் நவீன சிலிண்டர்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இரும்பு சிலிண்டர்கள்

வீடுகள், ஓட்டல்களில் சமையலுக்காக தற்போது பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர்கள் முற்றிலும் இரும்பால் செய்யப்பட்டவை ஆகும். சில வீடுகளில் ஒரே ஒரு சிலிண்டரை மட்டுமே வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு அதில் கியாஸ் எப்போது தீரும்? என்பது தெரியாது.

இதனால் கியாஸ் முற்றிலும் தீர்ந்து போன பிறகே அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்ய முடியும். புதிய சிலிண்டர் வரும் வரை அவர்கள் மாற்று ஏற்பாடு செய்துகொள்ள வேண்டி உள்ளது.

கியாஸ் இருப்பு

இந்த குறையை போக்க எண்ணெய் நிறுவனங்கள் நவீன சிலிண்டர்களை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளன. நார்வே நாட்டில் தயாரிக்கப்படும் இந்த நவீன சிலிண்டர்கள் அலுமினியம், இரும்பு கலவையால் ஆனது. கியாஸ் இருப்பு எவ்வளவு? என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த சிலிண்டர் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நவீன கியாஸ் சிலிண்டர்கள் 6 எடைப்பிரிவுகளில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. மேலும் இதன் எடையும் குறைவு. தற்போது 70–க்கும் மேற்பட்ட நாடுகளில் இவை புழக்கத்தில் உள்ளன.

விரைவில் அறிமுகம்

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் இந்த சிலிண்டர்களை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதை தொடர்ந்து பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் இதை வாங்க உள்ளது. இந்த சிலிண்டர்களில் கியாஸ் கசிவதற்கான வாய்ப்பு மிகவும் அரிது என்ற உத்தரவாதத்தை சிலிண்டர் தயாரிப்பு நிறுவனம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story