3 பாராளுமன்ற தொகுதிகள், 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு


3 பாராளுமன்ற தொகுதிகள், 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 March 2017 11:30 PM GMT (Updated: 9 March 2017 8:31 PM GMT)

காலியாக உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகள், 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் கமி‌ஷன் நேற்று அறிவித்தது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் காலியாக உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் கமி‌ஷன் நேற்று அறிவித்தது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், அனந்த்நாக் ஆகிய 2 பாராளுமன்ற தொகுதிகளில், ஏப்ரல் 9 மற்றும் 12–ந் தேதிகளில் 2 கட்டங்களாக இடைத்தேர்தல் நடைபெறும். அங்கு ஏப்ரல் 15–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

கேரள மாநிலம் மலப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ஏப்ரல் 12–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 17–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

டெல்லி, அசாம், இமாசலபிரதேசம், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கர்நாடகா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் ஏப்ரல் 9–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 13–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். சிக்கிம் மாநிலத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதியில் ஏப்ரல் 12–ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்று, ஏப்ரல் 15–ந் தேதி ஓட்டுகள் எண்ணப்படும்.

இடைத்தேர்தலை சந்திக்கும் தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.


Next Story