கேரள மாநில காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா


கேரள மாநில காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 10 March 2017 8:30 PM GMT (Updated: 2017-03-11T01:17:04+05:30)

கேரள மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் வி.எம். சுதீரன்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் வி.எம். சுதீரன். இவர் நேற்று திடீரென தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதனை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அவர் தனது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் ஒப்படைத்துவிட்டதாக கூறினார்.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோழிக்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டபோது மேடையில் இருந்து தவறிவிழுந்ததில் காயம் அடைந்ததாகவும், இதனால் உடல்நிலை மோசமாகி கட்சிப்பணி ஆற்றமுடியாத நிலை ஏற்பட்டதால் பதவியை ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்தார்.

கேரள மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தில் அவருக்கும் முன்னாள் முதல்–மந்திரி உம்மன் சாண்டிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story