பஞ்சாப் காங்கிரஸ் வெற்றி அம்ரீந்தருக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு


பஞ்சாப் காங்கிரஸ் வெற்றி  அம்ரீந்தருக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு
x
தினத்தந்தி 11 March 2017 4:45 AM GMT (Updated: 2017-03-11T10:14:52+05:30)

பஞ்சாப் காங்கிரஸ் வெற்றி அமீர்ந்தருக்கு இன்று பிறந்த நாள் இது அவருக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசாக கருதப்படுகிறது.

சண்டிகர்

பஞ்சாப் மாநிலத்தில் 62  க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும்பட்சத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அமரீந்தர் சிங்கி முதல் மந்திரியாக தேர்ந்து எடுக்கபடுவார்.இன்று அவரது பிறந்த நாள் இது அவருக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசாக கருதப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் இந்த முறை காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றே திட்டமிட்டு அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கடுமையாக உழைத்தது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் என்றால் பழம்பெரும் தலைவரும் அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங்கை ஒதுக்கி வைத்து விட்டு பார்க்க முடியாது. பாஜக கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் வந்து ஐக்கியமான நவ்ரோஜித் சிங் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக நிறுத்தப்படுவார் என்று கூறப்பட்டது.

ஆனால். தேர்தல் பிரச்சாரத்திற்கு முதன் முறையாக வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சியுடன் பார்க்கும்போது அமரீந்தர் சிங்கை விலக்கி வைக்க முடியாது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அமரீந்தர் சிங் தான் முதல்வர் என்று அறிவித்தார். சமீபத்தில் டெல்லியில் நடந்த தனது பேரனின் திருமணத்தில் அமரீந்தர் சிங் கலந்து கொண்டு இருந்தார். இவரது பேரனுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் கரண் சிங்கின் பேத்திக்கும் திருமணம் நடந்தது. இதே கையுடன் சண்டிகர் மாநிலத்தில் தங்கி இருந்து தேர்தல் பணிகளை கவனித்து வந்த அமரீந்தர் சிங்கிற்கு இன்று 75 வயது.

அவரது பிறந்த நாளில் அந்த மாநிலத்தின் முதல்வர் என்ற சிறப்பு பரிசு அவருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரசார் உள்ளனர்.

Next Story